மில்க் பவுடர் பர்ஃபி
தேவையான பொருள்கள்:
மில்க் பவுடர் - 1 1/4 கப்
பால் - 1/2 கப்
சீனி - 1 கப்
நெய் - 2tsp
தண்ணீர் - 3/4 கப்
பாதாம் எஸ்ஸன்ஸ் or வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 3 துளிகள்
குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் கலந்து வைக்கவும்)
ஃபுட் கலர் - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
ஒரு சட்டியில் சீனியுடன் தண்ணீர் சேர்த்து முதல் கம்பி பதம் வந்த பிறகு,
குங்குமப்பூ கலந்து வைத்த பால், பால் பவுடர், நெய் & கலர் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட்டு எஸ்ஸன்ஸ் சேர்க்கவும்.
பின் நெய் தடவிய தட்டில் பரப்பி, கட் செய்து பாதாம், அண்டி பருப்பு கொண்டு அலங்கரிக்கவும்.
சுவையான மில்க் பவுடர் பர்ஃபி தயார்.
எளிமையாக செய்யக் கூடிய சுவையான பர்ஃபியை நமக்காக செய்து அனுபியவர்
ஹுசைனா- துபாய்
No comments:
Post a Comment