ஜாலர் முர்தபா
ஜாலர் செய்ய
தேவையான பொருட்கள்
மைதா மாவு - அரை கிலோ
முட்டை - 2
பசுநெய்
உப்பு - தேவையான அளவு.
இதனை செய்வதற்கு ஜாலர் குவளை மிகவும் அவசியம்.
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி உப்பு, சலித்த மைதாமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சிறு மாவு கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
ஜாலர் குவளையில் ஊற்றினால், மாவு எளிதாக வெளிவரும் பதத்தில் மாவை சற்று திக்காக கரைக்க வேண்டும். சிறிது நீர்க்க இருக்கவேண்டும். மாவின் பதம் இதற்கு முக்கியம்.
2. மாவு கட்டியாக இருந்தால் மிக்ஸரில் அரைத்து கொள்ளலாம். தண்ணீர் போல கரைக்க கூடாது.
3. ஒரு தவாவை அடுப்பில் வைத்து, மேலே லேசாக நெய் தடவவும். ஜாலர் குவளையில் மாவை எடுத்துக்கொண்டு, குவளையை தவாவிற்கு நேராக சுற்றி ஜாங்கிரி, முறுக்கு பிழிவதுபோல் குவளையை சுற்ற வேண்டும்.
4.. அதிக நெருக்கமாக சுற்றி விடாமல், சற்று இடைவெளி விடடு சுற்றவும்.
இது மிக விரைவாக வெந்துவிடும். ஊற்றி சில நொடிகளில் ஜாலரின் மேல்புறத்தில் லேசாக நெய் தடவவும்.
5. நெய் தடவி லேசான பதத்தில் வெந்தவுடன் எடுத்து விடவும். இதனைத் திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை. இதே போல் அனைத்து மாவையும் ஜாலர்களாக ஊற்றி எடுக்கவும். இப்பொழுது
ஜாலர் தயார்.
ஸ்டப்பிங் செய்ய
வெங்காயம் - 1/2 kg
கொத்து கறி - 200 கிராம்
முட்டை - 5
இஞ்சி, பூண்டு விழுது - 1 tsp
கறி மசாலாதூள் - 1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
காரட் - 1
கொத்தமல்லி தழை - நறுக்கியது
புதினா
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 1 tsp
உப்பு - தேவையான அளவு.
பட்டானி விரும்பினால் சேர்த்து கொள்ளலாம்.
1. வெங்காயம், காரட், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கறி மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு லேசாக எண்ணெய் விடாமல் வதக்கிக் கொள்ளவும்.
3. மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொத்தின கறியை போட்டு வதக்கவும். கறி வாசனை வராமல் இருக்க அதில் இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி போட்டு வதக்கி, ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
4. பின்னர் கேரட் போட்டு வதக்கி வைத்துள்ள வெங்காயத்தில் போட்டு 5 நிமிடம் பிரட்டி விடவும்.
5. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 3 முட்டையை ஒரு கோப்பையில் உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி பொரித்து கொத்தி எடுத்து அதையும் மசாலாவுடன் சேர்த்து கிளறி விடவும்.
6. 2 முட்டையை நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்.
7. செய்து வைத்திருக்கும் ஜாலர் மூன்று எடுத்து ஒன்றன் மேல் ஒன்று நகர்த்தி வைத்து நடுவில் அடித்த முட்டையை தடவி அதன் மேல் வதக்கிய மசாலா உள்ளடத்தை வைக்கவும்.
8. பின்னர் நான்கு புறமும் மடித்து சிறிது அளவு முட்டையை தடவி வாணலியில் எண்ணெய் சிறிது அளவு விட்டு அதில் செய்து வைத்த ஜாலர்முர்தபாவை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி சுற்றி விடவும். பிறகு திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சுவையான ஜாலர் முர்தபா தயார்.
இதற்கு தொட்டு கொள்ள எதும் தேவையில்லை. கூத்தாநல்லூரில் பெருநாள் மற்றும் புதிதாக திருமணமான மணமக்கள் விருந்தில் முதலிடம் பெறும் டிஸ்.
No comments:
Post a Comment