S.A.kaja...
வாழைப்பூ குழம்பு
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1/2 பூ
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
அரைக்க:
சின்ன வெங்காயம் - 8
சீரகம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
செய்முறை:
1. வாழைப்பூவில் வேண்டாதவைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துவைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் பொடி, புளிக்கரைசல், மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.
7. பின் அதில் வாழைப்பூவை சேர்த்து நன்கு வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரிந்து வரும் போது இறக்கவும்.
சுவையான சத்தான வாழைப்பூ குழம்பு தயார்...
No comments:
Post a Comment