அறிமுகம்
இந்த இணையதளம் எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம் (பிரியம்) உள்ளதோ அவருக்கேயாகும். குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுளமெய்தி நோக்கிடின் இறைத் திருவருளிசையுமென்பதில் ஐயமின்று. இவ்வழியிற் செல்ல விரும்புவோருக்கே இஃது அமைக்கப்பட்டுள்ளது.
ஞான சூனியங்களுக்கன்று.
வாழ்க மெய்ப்பொருள்! வாழ்க மெய்ஞ்ஞானம்!! வாழ்க ஞானிகள்!!!
வெலிகாமாவில் 12 ஆம் ஆண்டு மீலாது நபி பெருவிழா
இலங்கையில் வெலிகாமாவில் சங்கைமிகு ஷெய்கு நாயகமவர்களின் திருஇல்லத்தில் நடைபெறும் மீலாது நபி பெருவிழாவின் நேரடி ஒலிபரப்பு
அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்கா ஏற்பாடு செய்து நடத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாத் தின விழா வெலிகாமம், இலக்கம் 52, புஹாரி மஸ்ஜித் மாவத்தை, "பைத்துல் பரகாஹ்" இல்லத்தில் அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மிகத்தலைவர் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவுன் அல் ஹஸனிய்யுல் அல் ஹுஸைனிய்யுல் அல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) அவர்களின் தலைமையில் எதிர் வரும் நவம்பர் 2017, 24-ஆம் திகதி முதல் 27-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. புனித "புர்தா ஷரீப்", "ரசூல் மாலை" அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் புனித "ராத்திப் மஜ்லிஸ்", அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புகழ்பாடும் “ஸுப்ஹான மௌலூத்” இவைகளை தொடர்ந்து 27- ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலமாக்கள் கலந்து கொள்ளும் பயான் நிகழ்ச்சி நடைபெறும்.
குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் அல் இக்துத் தராரீ ஃபீ ஷரகிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரீ(ரலி) (புகாரி ஷரீப் அரபு ஷரஹு 1 ஆம் பாகம்), ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் ஞான வெளிப்பாடாகிய இறைவலிய் ஸெய்யித் முஹம்மத் மௌலானா, தாகிபிரபம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கம் ஆகிய நூற்கள் வெளியிடப்படும்.
உயர்மிகு தலைமை:
குத்புஸ்ஸமான்,ஷம்ஸுல் வுஜூத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்
உரையாற்றுவோர்:
மௌலவி, ஹாபிழ், M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஆலிம் அவர்கள் (தலைவர், தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் பேரவை, சென்னை)
அல்ஹாஜ், ஹாபிழ், மௌலவி, P.A. காஜா முயீனுட்தீன் ஆலிம் பாக்கவி அவர்கள் (தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா)
மௌலவி, M. முஸ்தபா மஸ்லஹி M.A. அவர்கள் (பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அறபுக்கல்லூரி, தூத்துக்குடி)
நஜ்முல் உலமா, அல்ஹாஜ் மௌலவி முஹாஜிரீன் (நத்வி) ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (தலைவர், மஜ்லிஸுல் உலமா, கொழும்பு)
அல்ஹாஜ், மௌலவி அஹ்மது பழீல் ஆலிம் காஸிமிய்யி அவர்கள் (கலீபதுர் ரிபாயீ)
ஆலிம் புலவர், கலீபா, ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ அவர்கள்
நபிபுகழ்:
கலைமாமணி, அல்ஹாஜ், இறையன்பன் குத்தூஸ் மற்றும் குழுவினர் (சென்னை)
அமான் ரிபாய் காதிரி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்கும் நிறைந்தே நீ ஆனந்தமே!
உன் உடல் ஆவி அனைத்தையும் இறைவனுக்காகத் தியாகம் செய்வதே, தியாகம் அனைத்திலும் மிகவும் முக்கியமானது.நீ உன்னை இவ்வளவுதான் என மட்டுப்படுத்திக் கொள்ளாதிருப்பது.
நீ மட்டுப்படுத்தினால் அது உன்னை மட்டம் தட்டிவிடும். உன் உடலில் உள்ள சக்திப் பொருட்களெல்லாம் எங்கும் எல்லாவற்றிலும் தொடர்புள்ளவை என்பதை உணர்ந்துகொள்.
இறைபணி செய்பவர் யார்!
சுவர்க்கத்தில் அது இருக்கிறது இது இருக்கிறது பாலாறு ஓடும் மதுக் கிண்ணங்கள் உண்டு,மிக மிக அழகியர்களான அரம்பையர் என்னும் ஹூருல்ஈன்கள் மனைவிகளாவார்கள்.
காணாத பழவர்க்கங்கள் எல்லாம் உண்டு, ருசித்து ருசித்து இன்பம் அடையலாம். நீண்ட தாடியிலே ஹூருல்ஈன்கள் தூங்கிக் (தொங்கிக்) கொண்டிருப்பார்கள். பவளக் கட்டிலிலே இந்த இன்பங்களை அடைந்து அமைதியாக புது மாப்பிள்ளையாக உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்பதைக் கேட்ட மோகிகளும் இச்சையின் அடிமைகளும் இதற்காகவே தங்கள் வணக்கங்களைச் செய்து சுவர்க்கத்துக்கு இப்படியிருந்தால் செல்லலாம் அப்படியிருந்தால் செல்லாலாம் எனவெல்லாம் மதிமயங்கி அல்லாஹுவுக்காகவன்றி ஹூருல்ஈன் பெண்களுக்காகவும் மதுக்காகவும் புதுப் புது பழவர்கங்களைச் சாப்பிடுவதற்காகவும் பவளக் கட்டிலுக்காகவும் மிகவும் பிரயாசைப் படுகிறார்கள்.
இணைவைத்தல் (ஷிர்க்)என்றால் என்ன…?
கேள்வி: இணைவைத்தல் (ஷிர்க்)என்றால் என்ன…?
பதில்: இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வை ஒன்று இரண்டு மூன்று நான்கு எனப் பிரிக்கப்படுவது. அடுத்து அல்லாஹ் அதுபோலத்தான் இதுமாதிரித்தான் என்று சொல்வதும் இணைதான் ஷிர்க்தான். விளங்குவதற்க்காக சில உதாரணங்களை சொல்லவேண்டிய சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அது அதுவல்ல.
அருட்பெருஞ்சோதி அண்ணல் யாஸீன் (ரலி)
அருட்பெருஞ்சோதி அண்ணல் யாஸீன் (ரலி)
பூரணத்திலிருந்து பூரணம் வந்த பின்பு பூரணமே எஞ்சி நிற்கின்றது என்பது முதுமொழி. அன்றும் பூரணம்; இன்றும் பூரணம்; இனி என்றும் பூரணம் என்பதை பூரணமாக உணர்ந்து நித்தம் நித்தம் புத்தம் புதியதாக தோன்றிய போதும் அது முன்பு உள்ளதுபோல் தான் இன்றும் உள்ளது என்று நிற்பவர்களே மாகன்கள். குத்புமார்கள்.மீலாது நேரடி ஒளிப்பரப்பு
துபாய் லேண்ட்மார்க்
விடுதியில்
மிகச்சிறப்புடன்
நடைபெறும்
முப்பெரும் விழா
நிகழ்ச்சியின் நேரடி
ஒளிபரப்பை கண்டு
மகிழவும்.
நேரடி ஒளிப்பரப்பு
விடுதியில்
மிகச்சிறப்புடன்
நடைபெறும்
முப்பெரும் விழா
நிகழ்ச்சியின் நேரடி
ஒளிபரப்பை கண்டு
மகிழவும்.
நேரடி ஒளிப்பரப்பு
No comments:
Post a Comment