> முருங்கைக்காய் தொக்கு <
முருங்கைக்காயில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. முருங்கைக்காய் பிடிக்காதவர்களுக்கு இந்த முருங்கைக்காய் தொக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான முருங்கைக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் - 8
பெரிய வெங்காயம் - 4
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
மல்லித்தூள் - 2 ஸ்பு+ன்
கரம் மசாலாதூள் - கால் ஸ்பு+ன்
தக்காளி - 4
மிளகாய் தூள் - அரை ஸ்பு+ன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பு+ன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முருங்கைக்காய் தொக்கு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காயை பெரிய நீள துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
அடுத்து வேகவைத்த முருங்கைக்காய்கள் ஆறியதும், இரண்டாக பிரித்து ஸ்பு+ன் கொண்டு சதைப்பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக்கி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சியை துருவி வைத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சு+டானதும், அதில் பெரிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் மல்லித்தூள், கரம் மசாலாதூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்பு அதனுடன் முருங்கைகாய் சதை விழுது, தக்காளி விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, கெட்டியானதும் இறக்கினால் டேஸ்ட்டான முருங்கைக்காய் தொக்கு ரெடி.♂
- Manjunadhan Sri.
வாழ்த்துகள்...!
•┈┈• ❀ ❀ •┈┈•
No comments:
Post a Comment