மீன் வறுவல் meen varuval seivathu eppadi - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Saturday, 3 February 2018

மீன் வறுவல் meen varuval seivathu eppadi


மீன் வறுவல்


தேவையான பொருட்கள்:


பொருள் - அளவு

மீன் கால் கிலோ

மிளகு4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு2 டீஸ்பூன்

சோம்பு 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்

சீரகம்2 டீஸ்பூன்

உப்புதேவைக்கேற்ப

எண்ணெய்தேவைக்கேற்ப

சோளமாவு2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :


  மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின் நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். 


  ஒரு கடாயில் நறுக்கிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சோளமாவு போட்டு நன்றாக பிசையவும். சோளமாவு மீனுடன் ஒட்டி இருக்கும் மசாலாவை உதிராமல் இருக்க உதவும்.


  ஒரு மணி நேரம் மசாலா நன்கு ஊறும் வரை வைக்கவும். பின் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் பிசறி வைத்த மீனை ஒவ்வொன்றாய் போடவும். சிறு தீயில் வைக்கவும். மீன் கருகாமல் இருக்க ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும்.


  மீனில் ஒட்டியுள்ள மசாலா நன்றாக சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், மீனை மெதுவாக உடையாமல் புரட்டிப் போடவும். இரு பக்கமும் வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும்.


  இப்போது சுவையான மீன் வறுவல் ரெடி!!!!









இது போன்ற மேலும் சமையல் குறிப்புகளை அறிய எங்களது facebook page ல் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment