கடலை பருப்பு வடை
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கடலை பருப்பு1 கப்
வெங்காயம்1
கறிவேப்பிலை 4 கொத்து
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
வர மிளகாய்3
சீரகம்1 டீஸ்பூன்
இஞ்சி விழுது1 டீஸ்பூன்
பூண்டு பல்2
தேங்காய் துருவல் அரை கப்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் கடலை பருப்பு, மிளக்காய், இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும்.
பின் அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.
பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த பின்பு அதில் வெங்காயம், கறிவேப்பிலை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக எடுத்து தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். கடலைப் பருப்பு வடை ரெடி.
No comments:
Post a Comment