முழு தகவலும்படிக்க தொடவும்
ராகி இட்லி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
ராகி மாவு2 கப்
ரவை 2 கப்பச்சை மிளகாய் விழுது3 டீஸ்பு+ன்
இஞ்சி விழுது2 டீஸ்பு+ன்
கெட்டித்தயிர்2 கப்
கடுகு1 டீஸ்பு+ன்
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பு+ன்
கறிவேப்பிலை10 இலைகள்
சமையல் சோடா1 டீஸ்பு+ன்
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
உப்புதேவையான அளவு
செய்முறை :
🍪 ராகி இட்லி செய்வதற்கு முதலில் ராகி மாவு, ரவை இரண்டையும் வறுத்து, தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
🍪 பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு+டானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் விழுது, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
🍪 தாளித்தவற்றை தயிரில் ஊறிய மாவுடன் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.
🍪 அடுத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலக்கி வைத்துள்ள மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
🍪 சுவையான ராகி இட்லி தயார்.
No comments:
Post a Comment