DAY ONE COOKING TISPS SA KAJA
S.A.kaja...
தக்காளி குருமா| Thakkali kurma
தேவையானவை:
நறுக்கிய வெங்காயம் – 3
நறுக்கிய தக்காளி – 8
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1 கப்
கசகசா – 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
உப்பு – தேவைான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் –
தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன்
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து கொள்ளவும்.
பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் மூன்றையம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் தக்காளி வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் தக்காளி வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லிதழை தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி குருமா ரெடி.
No comments:
Post a Comment