S.A.kaja...
பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 3
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பட்டாணியை குக்கரில் போட்டு தண்ணீர்,உப்பு சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து அடுப்பை பத்து நிமிடம் சிம்மில் வைத்து மல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான பச்சை பட்டாணி மசாலா ரெடி .
No comments:
Post a Comment