S.A.kaja...
கோவைக்காய் சாதம்|kovakkai sadam
தேவையான பொருள்கள்
பச்சைஅரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் 1
கோவைக் காய் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து கடலைப் பருப்பு - தாளிக்க
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்து கிளரி 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசியை போட்டு ஒருகொதி வந்தவுடன் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு பின் இறக்கவும்.
பின் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒரு கிளறுகிளரி சூடாக பரிமாறவும்.
சுவையான கோவைக்காய் சாதம் ரெடி
No comments:
Post a Comment