சோயா கிரேவி - Soya Gravy - ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

ஹஸனைன் புட்ஸ் HASANAIN FOODS

HASANAIN FOODS BY MOHAMMED HASAN YASEENI ESA PALLIVAASAL TAMIL NADU Hasanyaseeni333@gmail.com +919042527234 +919042527234

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Qqq

Saturday, 17 March 2018

சோயா கிரேவி - Soya Gravy


சோயா கிரேவி - Soya Gravy

சோயா(மீல் மேக்கர்) சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான புரதச்சத்து சோயாவில் நிறைய இருக்கு. இதை மிக எளிதாய் சமைக்கலாம். சாதம், சப்பாத்தி, பூரி, நாண் இவற்றுடன் தொட்டுக்கொள்ள மிகச் சரியான சைட்டிஷ் இது....
 
தேவையான பொருட்கள்:

குட்டி சோயா - ஒரு கப்
தக்காளி - 2
வெங்காயம் - 2

அரைக்க:

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
சோம்பு - சிறிதளவு
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 6

தாளிக்க:

சோம்பு - சிறிதளவு
பட்டை - 2
 
செய்முறை:

* முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
 
* அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.

* சோயாவை(மீல் மேக்கர்) சுடு தண்­ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
 
* கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.
 
* பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
 
* அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.
 
* தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.

* பின் சோயவையும் சேர்த்து வதக்கவும்.
 
* 5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.
 
* பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும்.

* தேவையான அளவு தண்ணீ­ர் சேர்த்து கொதிக்க விடவும்.
 
* கொதித்த பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.

* இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.

குறிப்பு: காரம் தேவைக்கு தகுந்தாற் போல், அதிகப்படுத்திக்கொள்ளவும்.

No comments:

Post a Comment