மஷ்ரூம் சூப் - Indian Soup: Mushroom Soup
ஈஸியா ஜீரணமாக சிறந்தது சூப். உணவுப் பாதையில் உள்ள கசடை சரி செய்து ஜீரணதுக்கு உதவும் பெஸ்ட் அபிடைசர். சூப்புனாலே மஷ்ரூம் சூப்புக்குத்தான் தனி மவுசு. சுவை மட்டுமில்லாமல், அதிக சத்து இருக்கிறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி!
தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் மஷ்ரூம் - 3
எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
மைதா - 1-1/2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன்
சோளமாவு - 2 டீ ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை:
* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* சோள மாவு, மிளகுத் தூளை தனித்தனியே சிறிது தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு மைதா மாவைப் போட்டு வறுத்து, மூன்று கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய மஷ்ரூமை போட்டு நன்றாக வெந்ததும் கரைத்த சோளமாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
No comments:
Post a Comment