! சாப்பிடலாம் வாங்க!
! ஊட்டச் சத்து
! இது நம் உயிர் சத்து
+ கடைந்த கீரை +
தேவையான பொருட்கள்
1. கீரை ஒரு கட்டு;
2. பச்சை மிளகாய் - 5;
3. சின்ன வெங்காயம் - 8;
4. கடுகு தாளிக்க;
5. தேங்காய் எண்ணெய்;
6. உப்பு சிறிதளவு;
செய்முறை ;
1. கீரையை கிள்ளி நீரில் அலசி வைக்கவும்.
2. பிறகு வாணலியில் சிறிது நீர் விட்டு அதனுள் கீரையை போட்டு மூடி வைக்கவும்.
3. ஒரு நிமிடம் கழித்து அதனுடன் பச்சை மிளகாயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும். வேக வைத்த கீரையை ஆற வைக்கவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பாதி வதங்கியதும் உப்பு சேர்த்து அதனை கீரையுடன் சேர்த்து மத்தில் கடையவும்.
கடைந்த கீரையில் சிறிதளவு நெய் விட்டு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்...
No comments:
Post a Comment