புடலங்காய் முட்டை ரைஸ் செய்ய தேவையானவை:
- அரிசி - 2 கப்
- புடலங்காய் - 500 கிராம்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- காய்ந்த மிளகாய் - 2
- பூண்டு - 4 பல்
- முட்டை - 2
- எண்ணெய்
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
புடலங்காய் முட்டை ரைஸ் செய்வது எப்படி?
முதலில் அரிசியைப் போட்டு சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள். புடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கவும். பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். புடலங்காயைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவிடவும். பின்பு முட்டையை உடைத்து ஊற்றி வதக்கி உதிரியாக வரும் வரை கிளறி விடவும். சாதத்தின் மேல் கொட்டி கிளறி விடவும். சுவையான புடலங்காய் முட்டை சாதம் தயார்.
No comments:
Post a Comment