சுவையான நண்டு வறுவல் செய்ய தேவையானவை
- நண்டு - 1/2 கிலோ
- தக்காளி - 1
- பூண்டு - 10 பல்
- பட்டை - 2
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
- கிராம்பு - 5
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 1 கோப்பை
- கறிவேப்பிலை - 2 கொத்து
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 150 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி
முதலில் நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாதி சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிறகு கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.. இதனுடன் கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் நண்டை சேர்த்து லேசாக பிறட்டி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காயை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்து குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும், மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி பின்பு பரிமாறவும்.
No comments:
Post a Comment