S.A.kaja.வாழைக்காய் மிளகு வறுவல்|valakkai milagu varuvalதேவையான பொருள்கள்.வாழைக்காய் - 1மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்மிளகாய் தூள் -அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2 ஸ்பூன்பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்கடுகு - 1 ஸ்பூன்அரைப்பதற்கு தேவையானவைதேங்காய் - 2 ஸ்பூன்இஞ்சி - சிறிதளவுபூண்டு - 4 பல்மிளகு - 3 ஸ்பூன்செய்முறை :வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.வேக வைத்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி அரை நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.பின்பு அதில் லேசாக தண்ணீர் தெளித்து, 3 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி.
Qqq
Monday, 29 January 2018
வாழைக்காய் மிளகு வறுவல்|valakkai milagu varuval
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment