S.A.kaja...
பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma
தேவையான பொருள்கள்
பன்னீர் – 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 2
பச்சை பட்டாணி – 100 கிராம்
நறுக்கிய உருளை கிழந்கு – 1
நறுக்கிய தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
சோம்பு – அரை ஸ்பூன்
கசாகசா – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பட்டை சோம்பு கிராம்பு - சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
இப்போது அதே கடாயில் தேங்காய் சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மிளகாய்,கசாகசா, சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி அதனுடன் பட்டாணி உருளைகிழங்கு தக்காளி சேர்த்து வதக்கி தேவைாயன அளவு உப்பு ,தண்ணீர் சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைத்து அதில் பன்னீரை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான பட்டாணி பன்னீர் குருமா ரெடி
No comments:
Post a Comment