S.A.kaja...
குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
குடைமிளகாய் - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்
பட்டைகிராம்பு - சிறிதளவு
கரம் மசாலா - அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
இஞ்சி பூண்டு - சிறிதளவு
மிளகு - அரை ஸ்பூன்
முந்திரி - 8
சோம்பு - சிறிதளவு
செய்முறை:
முதலில் அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து உதிரியாக வடித்து கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் சேர்த்து தாளித்து, அதனுடன் பட்டை கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி இறக்க வேண்டும்.
இப்பபோது சுவையான குடைமிளகாய் புலாவ் ரெடி.
Qqq
Thursday, 25 January 2018
Home
Unlabelled
குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment